Home இலங்கை பொருளாதாரம் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

0

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இந்தநிலையில், தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (19) சற்று குறைவடைந்துள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது இன்று 1,006,015 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,490 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 283,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,540 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 260,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,060 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 248,450 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

Source: https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1755586842

NO COMMENTS

Exit mobile version