இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (25.08.2026) சிறு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் (24.08.2026) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 386,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று அதன் விலை 2000 ரூபாயால் குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை நிலவரம்
அதன்படி, இன்றைய தங்க விலை நிலவரப்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 384,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 353,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 48,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 44,163 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Source: https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1787638230
