நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று இதுவரை தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
முதலாம் இணைப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (01.09.2026) சற்று சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் இவ்வாரம் வெளியிடப்படவுள்ள முக்கிய அமெரிக்க தொழிலாளர் சந்தை தரவுகள் மீது வர்த்தகர்கள் கவனம் செலுத்துவது இதற்கு காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஒரு அவுன்ஸ் உடனடி தங்கத்தின் விலை 0.3% குறைந்து, 4,437.10 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
தங்க விலையின் மீதான அழுத்தம்
இதற்கிடையில், ஈரான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதன் விளைவாக, மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதுடன், தொடர்ந்து இரண்டாவது நாளாக எண்ணெய் விலைகளும் உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் தங்கத்தின் விலைகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
YOU MAY LIKE THIS VIDEO
Source: https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1788239934
