Home முக்கியச் செய்திகள் தங்கத்தின் விலை அதிகரிப்பு : வெளியான முக்கிய தகவல்

தங்கத்தின் விலை அதிகரிப்பு : வெளியான முக்கிய தகவல்

0

உலக சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்ததைத் தொடர்ந்து இலங்கையிலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய (01) நிலவரப்படி, உலகளவில் தங்கத்தின் விலை 4,238 அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 25ஆம் திகதி இருந்த விலையுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தங்கத்தின் விலை 5,500 ரூபாயால் அதிகரித்துள்ளது.

2,000 ரூபாய் அதிகரிப்பு

அதன்படி, இன்றைய திகதிக்குள் தங்கத்தின் விலை 2,000 ரூபாய் அதிகரித்துள்ளது.

கொழும்பு புறக்கோட்டை தங்கச் சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை 314,700 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேவேளை, நவம்பர் 25 அன்று 336,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கத்தின் விலை 342,000 ரூபாயாக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version