Home இலங்கை சமூகம் தங்கத்தின் விலை வரலாறு காணாத ரீதியில் அதிகரிக்கும் அபாயம்: வாங்குபவர்கள் அவதானம்

தங்கத்தின் விலை வரலாறு காணாத ரீதியில் அதிகரிக்கும் அபாயம்: வாங்குபவர்கள் அவதானம்

0

எதிர்வரும் ஆண்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத ரீதியில் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, உலக தங்க சந்தையில் 5000 டொலர் வரை தங்கத்தின் விலை பதிவாகக்கூடும் என்றும் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளது.

நாட்டில் அண்மைய நாட்களாக திடீர் அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் தற்போது தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்து வருவதுடன், ஒரு பவுண் தங்கத்தின் விலை மூன்று இலட்சம் ரூபாயை விட குறைவடைந்துள்ளது.

தங்க நகைகளை வாங்குபவர்கள் அவதானம்

மேலும், இவ்வாண்டில் தங்கத்தின் விலைகள் தொடர்ந்து குறைவடையும் என குறித்த ஆணைக்குழுவின் உதவி இயக்குநர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் தங்க நகைகளை வாங்குபவர்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, தங்கத்தின் தரம் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தங்கத்தின் விலைகள் எதிர்வரும் ஆண்டில் அதிகரிக்கும் அபாயம் உள்ளமையினால் மக்கள் தங்கத்தில் தங்களது முதலீகளை மேற்கொள்ள முடியும் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version