43 மில்லியன் ரூபா பெறுமதியான 16 தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமான முறையில் கடத்தி வந்த வர்த்தகர் ஒருவர் இன்று (13) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் இந்த நபரை கைது செய்தனர்.
28 வயதுடைய வர்த்தகர்
சந்தேக நபர் காலி பிரதேசத்தில் வசித்து வரும் 28 வயதுடைய வர்த்தகர் எனவும் அவர் அடிக்கடி வெளிநாட்டிற்கு பயணிப்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்று காலை 06.05 மணியளவில் துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன் தனது கைப்பையில் இந்த தங்க பிஸ்கட்டுக்களை மறைத்து வைத்திருந்துள்ளார்.
இந்த தங்க பிஸ்கட்டுகள் 08 வீதம் 02 பொதிகளாக பொதியிடப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.