Home இலங்கை சமூகம் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் வலுக்கும் சர்சைகள் : அவசரமாக கூட்டப்பட்ட பொதுச் சபை கூட்டம்

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் வலுக்கும் சர்சைகள் : அவசரமாக கூட்டப்பட்ட பொதுச் சபை கூட்டம்

0

அண்மைய நாட்களாக திருக்கோணேஸ்வர ஆலயத்தில் தாலி திருட்டு போன சம்பவம் குறித்து பலதரப்பட்ட சர்ச்சைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், தாலி திருட்டு போனமை குறித்து கடந்த 11 ஆம் திகதி செந்தில் தொண்டமானால் (Senthil Thondaman) யாப்புக்கு முரணான திருக்கோணேஸ்வரம் ஆலய அபிவிருத்தி சம்பந்தமான பொது சபை உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று அவசர அவசரமாக நடத்தப்பட்டது.

குறித்த கூட்டத்தில் செந்தில் தொண்டாமான் பல கருத்துக்களை முன்வைக்க இது குறித்து மக்களுக்கும் ஆளுநருக்கும் இடையில் வாக்குவாதங்களும் இடம்பெற்றுள்ளது.

நகை திருட்டு

இந்தநிலையில், கூட்டத்துக்கு வருகை தந்த திருகோணமலை (Trincomalee) சேர்ந்த ஆயுள் கால உறுபினர்கள் தமது கேள்விக்கு நீங்கள் பதில் கூறியே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த காரணத்தால் பின்வரும் கேள்விகள் மற்றும் விளக்கங்கள் மக்களால் முன்வைக்கப்பட்டன.

  1. 2009 ஆம் ஆண்டு நீதிமன்றதால் நிர்வாக சபையிடம் கோவிலை ஒப்படைக்கும் போது இப்படியான சோழர் காலத்து நகை என்ற ஒன்று இருக்கவில்லை, கடந்த சிவராத்திரி நிகழ்வில் ஆலயத்துக்கு சொந்தமான அனைத்து அசையும் அசையா சொத்து விபரங்களும் பெரிய திரையில் மக்கள் பார்வைக்கு காண்பிக்கபட்டது அதில் எங்குமே சோழர் காலத்து நகை என்ற ஒன்று எங்குமே இருக்கவில்லை அவ்வாறு இருக்க இப்படி சோழர் காலத்து நகை திருட்டு என்று செய்தி வெளியிட பின்னணி என்ன ?
  2. திருகோணமலையில் தீர்க்கபட வேண்டிய கன்னியா மற்றும் கோணேசர் ஆலய சட்டவிரோத கடைகள் என்று எவ்வளவோ பிரச்சனை இருக்கும் போது அதை பார்க்காமல் இந்த மூன்று பவுண் தாலி விடயத்தை தூக்கி பிடித்த யாப்புக்கு முரணான கூட்டத்தின் நோக்கம் என்ன ?
  3. குடியியல் நீதிமன்றில் ஆலயம் தொடர்பான ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது எழுத்து மூலம் எந்த அறிவித்தலும் இல்லாமல் இப்படி ஒரு சட்டத்துக்கு முரணான அவசர கூட்டம் கூட்ட வேண்டிய தேவை என்ன ?

இவ்வாறு கேள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த கேள்விகளுக்கு பதில் வழங்காத செந்தில் தொண்டமான் அந்த இடத்தை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், குறித்த சர்ச்சை மற்றும் சம்பவம் குறித்து கூட்டத்தில் கலந்துக்கொண்ட செயற்பாட்டாளர் ரஜீவிடம் (Rajiv) நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணல் பின்வருமாறு,

https://www.youtube.com/embed/vYY4fUWxCI0

NO COMMENTS

Exit mobile version