Home சினிமா வித்தியாசமாக வரும் கோலி சோடா 3 -ம் பாகம்.. வெளியான புது அப்டேட் இதோ

வித்தியாசமாக வரும் கோலி சோடா 3 -ம் பாகம்.. வெளியான புது அப்டேட் இதோ

0

விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த படம் கோலி சோடா. கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் ஆகியோர் நடித்து வெளிவந்து நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெற்றது. ஏற்கனவே, இவர்கள் பசங்க படத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலி சோடா படத்திற்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் வரவேற்பு பெறவில்லை. தற்போது, இந்த படத்தின் மூன்றாம் பாகம் கோலி சோடா தி ரைசிங் என்ற தலைப்பில் வெப் சீரிஸ் ஆக வெளிவர உள்ளது.

வெப் சீரிஸ்

இதில் சேரன், ஷாம், புகழ், அவந்திகா, அம்மு, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் போன்ற மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது. இருப்பினும் இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை.

கோலி சோடா படத்திற்கு கிடைத்த வரவேற்பு அதன் மூன்றாம் பாகத்திற்கும் கிடைக்குமா என பார்க்கலாம். 

Source: https://cineulagam.com/article/goli-soda-rising-web-series-in-hotstar-soon-1725050176

NO COMMENTS

Exit mobile version