Home சினிமா தமிழகத்தில் 10 நாட்களில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழகத்தில் 10 நாட்களில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

குட் பேட் அக்லி

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி.

ஒரு வெறித்தனமான ஃபேன் பாய்யாக இப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். படத்தில் வந்த ஒவ்வொரு காட்சியிலும் அஜித்தை வேற லெவலில் காட்டியிருந்தார்.

உலகளவிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் முதல் நாளே ரூ. 30.9 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

தமிழக வசூல்

இந்த நிலையில் 10 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 140 கோடி வசூல் செய்துள்ளது. 

Source: https://cineulagam.com/article/good-bad-ugly-tamilnadu-10-days-box-office-1745123619

NO COMMENTS

Exit mobile version