Home இலங்கை சமூகம் ஆயுர்வேத மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

ஆயுர்வேத மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

0

மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் வழங்குவதை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) ஆயுர்வேத மருந்துகள் மற்றும் தயாரிப்புகள் ஒழுங்குமுறை சபையின் புதிய உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பொருட்கள் ஒழுங்குமுறை சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(01) ராஜகிரிய ஆயுர்வேத தேசிய மருத்துவமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

ஆயுர்வேத துறை

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,“ ஆயுர்வேத துறையின் ஒழுங்குமுறை பொறுப்பிலிருந்து விலகியிருக்கும் போது தரமான மற்றும் உயர்தர பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை. தற்போது அது குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

உள்ளூர் மருத்துவ முறையை நன்கு மேம்படுத்தி எதிர்கால இலக்குகளில் அந்த மருத்துவ முறை தொடர்பான தனித்தன்மைகளை அடையாளம் கண்டு அந்தத் தனித்தன்மைகளை சுற்றுலா வணிகத்துடன் இணைத்து சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை அமைப்புகளை ஒன்றிணைக்கும் போது சுற்றுலாப் பகுதிகளில் மனித மற்றும் பௌதீக வசதிகளை துரிதமாக அபிவிருத்தி செய்யுமாறு அரசாங்கம் கோருகிறது” என
அமைச்சர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version