Home இலங்கை பொருளாதாரம் இலங்கைக்கு கிடைக்கவுள்ள மகிழ்ச்சியான தகவல்

இலங்கைக்கு கிடைக்கவுள்ள மகிழ்ச்சியான தகவல்

0

இலங்கை எதிர்நோக்கி வரும் வங்குரோத்து நிலையிலிருந்து விரைவில் மீளப் போவதாக மகிழ்ச்சியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு வருடங்களுக்கும் மேலாக எதிர்நோக்கி வரும் இந்த நிலை முடிவுக்கு வருவதாக அறிவிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அதற்கமைய, இலங்கையை திவால் நிலையில் இருந்து விடுவிப்பதாக எதிர்வரும் 28ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தினால் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திவால் நிலை

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதியன்று, இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதமையால் திவால் அடைந்த நாடாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version