Home இலங்கை சமூகம் ஹஜ் யாத்திரை செல்லும் இலங்கையருக்கு வெளியான தகவல்!

ஹஜ் யாத்திரை செல்லும் இலங்கையருக்கு வெளியான தகவல்!

0

இந்த ஆண்டு(2025) ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களுக்கு சவுதி அரேபியாவுக்குச் செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

அத்துடன், இது தொடர்பாக தேவையான ஒப்பந்தங்களும் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹஜ் யாத்திரை

அதன்படி, சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா துணை அமைச்சர் அப்துல்பத்தா பின் சுலைமான் மஷாத் மற்றும் இலங்கையின் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் டொக்டர் ஹினிதும சுனில் செனவி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதேவேளை, ஹஜ் யாத்திரை தொடர்பான வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் இலங்கையிலிருந்து வரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக மத மற்றும் கலாசார விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், 2025ம் ஆண்டு ஹஜ் பயணத்தில் இந்தியாவில் இருந்து ஹஜ் செல்ல 1,75,025 பேருக்கு ஒதுக்கீடு செய்து சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் நடப்பாண்டில் கூடுதலாக மேலும் 10,000 பேருக்கு அனுமதி வழங்குமாறு இந்தியா கோரியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version