Home இலங்கை கல்வி பாடசாலைச் சீருடை விநியோகம்…! கல்வி அமைச்சின் அறிவிப்பு

பாடசாலைச் சீருடை விநியோகம்…! கல்வி அமைச்சின் அறிவிப்பு

0

2026-ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகள் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்க மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளின் மாணவர்கள், அரச அங்கீகாரம் பெற்ற பிரிவேனாக்களின் கல்வி கற்கும் பிக்குகள் என 2026-ஆம் ஆண்டிற்காகத் தேவைப்படும் மொத்த சீருடைத் துணி அளவான 11.484 மில்லியன் மீற்றர் துணிகளை சீன மக்கள் குடியரசு நன்கொடையாக வழங்கியிருந்தது.

நாடளாவிய ரீதியில் உள்ள 4,418,404 மாணவர்களுக்காக இந்த சீருடைத் துணிகள் அனைத்தும் தற்போது விநியோகிக்கப்பட்டு முடிந்துள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

விடுமுறை 

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நேற்றுடன் (10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அவ்வாறு ஆரம்பிக்கப்படும் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் 2026.07.24 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  

Source: https://ibctamil.com/article/good-news-for-students-moe-free-school-uniforms-1775870085

NO COMMENTS

Exit mobile version