Home இலங்கை சமூகம் சுகாதாரத் துறையில் உள்ளவர்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பு

சுகாதாரத் துறையில் உள்ளவர்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பு

0

எதிர்காலத்தில் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்புகளுக்காக பல ஆட்சேர்ப்புகள் செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்று (6) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, ஏப்ரல் மாதத்தில் 3,147 தாதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்சேர்ப்பு

அத்தோடு, இந்த மாத நடுப்பகுதிக்குள் 976 குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் மாத நடுப்பகுதிக்குள் 238 பொது சுகாதார ஆய்வாளர்கள், 65 மருந்தாளுநர்கள், 43 தொழில் சிகிச்சையாளர்கள் மற்றும் 41 கதிரியக்க வல்லுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

அத்தோடு, மே மாதத்திற்குள் 1,000 உதவியாளர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனைத்து தர தாதியர்களுக்கும் குறிப்பிடத்தக்க சம்பள உயர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version