இலங்கையின் நடிப்பரசி என போற்றப்படும் மாலினி பொன்சேகாவிற்கு நாட்டின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் ஒன்றாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இவ்வாறு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் மாலினி பொன்சேகாவின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் மாலை நடைபெறவுள்ளது.
சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த மாலினி பொன்சேகா நேற்றைய தினம் தனது 78ம் வயதில் காலமானார்.
