மாமன்
தமிழ் சினிமாவில் தற்போது மிரட்டலான ஹீரோவாக கலக்கிக்கொண்டு இருக்கிறார் சூரி.
விடுதலை, கருடன், கொட்டுக்காளி என தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வரும் சூரியின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் மாமன்.
எமோஷனல் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படத்தை இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார்.
மேலும் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்க, ஸ்வாசிகா, ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், பாபா பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
வசூல் விவரம்
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள சூரியின் மாமன் படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 9 நாட்களில் உலகளவில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது.
