யுத்த காலத்தில், இலங்கையின் வான்படைக்கு உக்ரைனிடமிருந்து MiG-27 விமானங்களை கொள்வனவு செய்ததில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஊழல் இடம்பெற்றதாக ஊடகவியலாளரான லசந்த விக்ரமதுங்க செய்தி வெளியிட்டிருந்தார்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் லசந்த விக்ரமதுங்க முன்னிலையாக இருந்தார்.
குறித்த விசாரணை திகதியிடப்பட்டிருந்த தினத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு நாடறிந்த ஒரு ஊடகவியலாளரை படுகொலை செய்ய வேண்டிய தேவை அன்று ஏன் ஏற்பட்டது என்பது குறித்து ஆராய்கின்றது உண்மைகள் நிகழ்ச்சி,
