Home இலங்கை அரசியல் சரத்பொன்சேகாவிடம் உள்ள குரல் பதிவு- காணொளிகளை வெளியிடுமாறு நாமல் வலியுறுத்து

சரத்பொன்சேகாவிடம் உள்ள குரல் பதிவு- காணொளிகளை வெளியிடுமாறு நாமல் வலியுறுத்து

0

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வசம் குரல் பதிவுக் காணொளிகள்
இருந்தால் அதை அவர் வெளியிடட்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்
தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ராஜபக்சர்கள் தொடர்பாக சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்கள் மற்றும்
காணொளி வெளியிடும் விவகாரம் என்பன தொடர்பில் ஊடகங்களால் எழுப்பப்பட்ட
கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாமல் வலியுறுத்து

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“சரத் பொன்சேகாவின் இயல்பு அது. முன்னரும் அவர் அப்படிதான். குரல் பதிவு
இருந்தால் அதனை அவர் வெளியிடட்டும்.அதற்குரிய உரிமை அவருக்கு உள்ளது.

கோட்டாபய ராஜபக்ச, சரத் பொன்சேகாவுடன் நம்பி கதைத்திருக்கக்கூடும். ஆக அதை
வெளியிட்டால் தற்போது சரத் பொன்சேகாவை நம்புபவர்களின் நிலை என்னவென்று
சொல்வது?.” என கேள்வியேழுப்பியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version