Home இலங்கை சமூகம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் பாரிய மாற்றத்தை செய்யவுள்ள அநுர அரசு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் பாரிய மாற்றத்தை செய்யவுள்ள அநுர அரசு

0

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அரசாங்கத்தில் நிச்சயமாக சம்பள ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அரச ஊழியர்களுக்கு நிச்சயமாக சம்பள அதிகரிப்பு காணப்படும்.

அது அடிப்படை சம்பளத்தில் ஒருவீதமாக இருக்க போகின்றதா அல்லது, கொடுப்பனவாக வழங்கப்படுமா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை, அத்தோடு  அனைத்து அரச ஊழியர்களினதும் பாரிய எதிர்ப்பார்ப்பாக இந்த அரசாங்கமாவது சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளுமா என்பதே காணப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய அரசின் மாற்றங்கள், வாகன இறக்குமதி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரச ஊழியர்கள் சம்பளம் என்பவை தொடர்பிலி் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,

   

https://www.youtube.com/embed/JLJ8Bt3TU38

NO COMMENTS

Exit mobile version