Home இலங்கை சமூகம் கனமழையால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு: வெளியான மகிழ்ச்சி தகவல்

கனமழையால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு: வெளியான மகிழ்ச்சி தகவல்

0

கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்பட்ட பயிர் சேதத்தை மதிப்பிடும் பணியை விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நெல், சோளம், உருளைக்கிழங்கு, வெங்காயம், போஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகிய பயிர்ச்செய்கை சேதங்களுக்கு காப்பீட்டுத் தொகை பெற வேண்டிய அவசியமில்லை என்பதுடன் 05 ஏக்கர் வரை இலவச காப்பீட்டு இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பயிர் சேதத்தின் போது ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 100,000 வரை காப்பீட்டுத் தொகை விடுவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காப்பீட்டு சபை

மேற்கண்ட சூழ்நிலையில், மாத்தறை மாவட்டத்தில் சுமார் 100 விவசாயிகளுக்குச் சொந்தமான 130 ஏக்கர் நெல் வயல்கள் சேதமடைந்துள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் பயிர் சேதத்தை தொடர்ந்து கண்காணிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த நெல் வயல்கள் மற்றும் பிற பயிர்களில் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருவதாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபையின் மாவட்டத்திற்கு பொறுப்பான பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் பயிர் சேதம் குறித்து விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபையின் 1918 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version