காவல்துறை சேவையில் 2,500 பேரை அவசரமாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (10.04.2025) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் எதிர்காலத்தில் ஆட்சேர்ப்பு தொடரும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர்
காவல்துறையினரின் துன்புறுத்தல்களைக் குறைப்பதற்கான விசேட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், காவல்துறை தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சட்டமா அதிபருடன் தொடர்ந்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும்பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் வெற்றிடமாகவுள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான அதிபர் நியமனங்கள் உரிய முறைமையை பின்பற்றி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (09.04.2025) வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் அமில பிரசாத் (Amila Prasad) எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
https://www.youtube.com/embed/tF7aG3kkCLA
