Home இலங்கை சமூகம் அரச அதிகாரி பதவி முத்திரையை தலைகீழாக பொறித்த விவகாரம்: யாழ். ஊடகவியலாளரிடம் வாக்குமூலம்

அரச அதிகாரி பதவி முத்திரையை தலைகீழாக பொறித்த விவகாரம்: யாழ். ஊடகவியலாளரிடம் வாக்குமூலம்

0

அரச அதிகாரியின் தலைகீழாக பொறிக்கப்பட்ட பதவி முத்திரை தொடர்பான கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாரிய விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்து.

குறித்த கடிதம் தொடர்பில் முகநூலில் பதிவிட்ட ஊடகவியலாளர் சொர்ணலிங்கம் வர்ணனை யாழ்ப்பாணம் (jaffna) – காங்கேசன்துறை கணிணி காவல்துறை பிரிவினர் வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்வதற்காக அழைப்பு விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காவல்துறையினர் வாக்குமூலம்

தனது பதவி முத்திரையை தலைகீழாக பொறித்து கடிதம் ஒன்றினை அனுப்பிய மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் த.உமாவினால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் முகநூலில் பதிவிட்ட ஊடகவியலாளர் சொர்ணலிங்கம் வர்ணனை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர், பதவி முத்திரையினை தலைகீழாக பொறிக்கப்பட்டமை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் உமா காவல்துறை கணிணி பிரிவிற்கு முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.  

இது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை ஊடகவியலாளர் சொர்ணலிங்கம் வர்ணனை வாக்குமூலம் வழங்க வருமாறு காங்கேசன்துறை கணிணி காவல்துறை பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version