முல்லைத்தீவில் பெய்த கனமழையால் பாதிப்புற்ற மக்களை மாவட்ட அரசாங்க அதிபர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குற்பட்ட பகுதிகளில் நேற்று 05.12.2025 குறித்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
சிராட்டிகுளம் கிராமம் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் உடமைகள், கால் நடைகளை மற்றும் விவசாயத்தை இழந்துள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் காலம்காலமாக பாதிப்புறுவதால் மாற்று தங்குமிடத்தினை தயார்படுத்தி தருவதாகவும் அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளார்.
