Home இலங்கை சமூகம் நற்பெயருக்கு களங்கம்: விசாரணை நடத்துமாறு கோரும் அரச மருத்துவர்கள்

நற்பெயருக்கு களங்கம்: விசாரணை நடத்துமாறு கோரும் அரச மருத்துவர்கள்

0

தமது தொழிற்சங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி குறித்து,
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் விசாரணையை
கோரியுள்ளது.

தனது போலி கையொப்பம் மற்றும் போலி கடிதத்தலைப்புடன் போலியான கடிதம் ஒன்று,
இணையத்தில் பரப்பப்படுவதாக, சங்கத்தின் செயலாளர் பிரபாத் சுகததாச
தெரிவித்துள்ளார்.

விசாரணை

இந்தநிலையில், சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணையை நடத்தவேண்டும் என்று
தாம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version