Home இலங்கை சமூகம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்காக ஒதுக்கப்படும் நிதி

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்காக ஒதுக்கப்படும் நிதி

0

அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பொதுத் துறை ஊழியர்களுக்கான உத்தேச சம்பள அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை செலுத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்குவதற்கு திறைசேரி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 185 பில்லியன் ரூபாவை குறித்த செலவுகளுக்காக திறைசேரி ஒதுக்கவுள்ளது.

ஒதுக்கீடுகளுக்கான ஏற்பாடுகள்

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்கப்படும் ஒதுக்கீடுகளுக்கான ஏற்பாடுகளை திறைசேரி செய்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

வருவாய் இலக்குகளை அடைவதில்,ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கருத்திற் கொண்டு உத்தேச அதிகரிப்புக்களை வழங்க முடியும் என்று திறைசேரியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Source: https://tamilwin.com/article/government-employee-salary-1724144542

NO COMMENTS

Exit mobile version