Home இலங்கை அரசியல் அரச ஊழியர்கள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரச ஊழியர்கள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

தவறு செய்யும் அரச ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதியமைச்சர் சுனில் வடகல எச்சரித்துள்ளார்.

தனியார் வானொலியொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடகல மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் பணியிடை நீக்கம்

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், பொலிஸ் திணைக்களத்தில் தற்போதைக்கு 21 ஆயிரம் வெற்றிடங்கள் நிலவுகின்றன. ஆயினும் அதனைக் கருத்திற்கொள்ளாது தவறு செய்த 300 பொலிஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதே போன்று தவறு செய்யும் அரச ஊழியர்கள் எவராக இருப்பினும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்திட்டம்

அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொதுமக்களை இணைக்கும் செயற்திட்டமொன்று விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதி அமைச்சர் சுனில் வடகல தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version