Home இலங்கை சமூகம் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு: அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு: அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

0

அனைத்து அரச ஊழியர்களுக்கும் சரியான முறையின் கீழ் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என பொது சேவைக்கான நாடாளுமன்ற துணைக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி (Chandana Sooriyaarachchi) தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், அரச சேவையில் சம்பள உயர்வு தொடர்பான தேசிய கொள்கையை உருவாக்கும் செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

சம்பள அதிகரிப்பு

அந்தக் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளில் குறிப்பிட்ட புள்ளிகள் இரண்டு வாரங்களுக்குள் உரிய அமைச்சிற்கு அனுப்பப்படும் என்று சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.

அமைச்சினால் உரிய கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் அவை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் ஆராய்ந்த பின்னர் உரிய முறைக்கமைய, அரை அரசாங்கம் உட்பட அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து ஊழியர்களுக்கும் முறையாக மற்றும் சரியான முறையின் கீழ் சம்பள அதிகரிப்பு வழங்க எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version