அடுத்த ஆண்டு அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே (Nalin Hewage) தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடை (Ambalangoda) பிரதேச செயலகத்தில் இன்று (30.05.2025) நடைபெற்ற பிராந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்கள்
இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், “அரச ஊழியர்கள் தங்கள் பணிகளை முறையாகச் செய்தால், நாடு வளர்ச்சியடையும்.
நாம் வேலை செய்வதை விளம்பரப்படுத்தக் கூடாது. அரசாங்கம் கொடுக்கும் வேலையைச் செய்தால் போதும்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நாங்கள் செயற்பட்டு வருகிறோம்.” என தெரிவித்தார்.
