அதிகாரம் இருந்தும் அரசாங்கத்தால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியவில்லை என குரல் அற்றவர்களின் குரல்
அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று(26) நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இந்த அரசாங்கமானது அரசியல் கைதிகளை விடுவதாக வாக்குறுதி வழங்கி ஆசனமேறியது. ஆனால், ஒரு அரசியல் கைதி கூட இதுவரை விடுதலை செய்யப்படவில்லை என்பது
தொடர்ச்சியாக ஏமாற்றத்தை தருகின்றது.
கைதிகளின் விடுதலை சாத்தியப்படவில்லை
தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இருக்கும்போது, கடந்த காலத்தில் தற்போதைய
ஜனாதிபதியை நேரில் தொடர்புகொண்டு கதைத்தவேளை, தாங்கள் ஆட்சிக்கு வந்து 24
மணிநேரத்தில் விடுதலை செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டவர்கள்
இன்று சாட்சிகளாக இருக்கின்றனர்.
அதேநேரம், அமைச்சர் சந்திரசேகரனை நேரில் சந்தித்து கைதிகளின் விடுதலை தொடர்பாக
கோரிக்கை முன்வைத்திருந்தவேளை, எங்களை விட தாங்களே கைதிகளின் விடயத்தில் அதிகம்
கவனம் எடுப்பதாகவும், கடந்த காலங்களில் இந்த அரசியல் கைதிகளின் விடுதலை
தொடர்பாக வலுவான கோரிக்கை முன்வைத்து வந்ததாகவும் கூறினார்.
ஆனால், அதிகாரம்
அவர்களிடம் கிடைத்தும் கூட கைதிகளின் விடுதலை என்பது சாத்தியப்படவில்லை.
30 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் மீதமாக 10 தமிழ் அரசியல் கைதிகள் சிறையில்
வாடுகான்றார்கள். போர் நிறைவுற்று 16 ஆண்டுகள் கழிந்துள்ள இந்த காலத்தில் எமது
நாட்டில் வாழக்கூடிய ஒரு நல்லெண்ண சூழலை உருவாக்க வேண்டும் என கோரிக்கையை
முன்வைக்கின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
