Home சினிமா ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை தொடர்ந்து போதைப் பொருள் லிஸ்டில் சிக்கும் பிரபலம்… இவருமா?

ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை தொடர்ந்து போதைப் பொருள் லிஸ்டில் சிக்கும் பிரபலம்… இவருமா?

0

ஸ்ரீகாந்த்

தமிழ் சினிமா ரசிகர்கள் படங்களை பற்றி பேசுவதை தாண்டி இன்னொரு விஷயம் குறித்து தான் அதிகமாக பேசி வருகிறார்கள்.

என்னது அது, பிரபல நடிகர் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரம் தான். நடிகர் ஸ்ரீகாந்த் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தான் போதைக்கு அடிமையான விஷயத்தை கூறியுள்ளார்.

இந்த பழக்கம் எப்படி வந்தது, தற்போது வருந்துவதாகவும் போலீசாரிடம் கூறியிருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவிடமும் போதைப் பொருள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவர் பயன்படுத்தவில்லை என்றாலும் அவரால் வேறு யாராவது போதைப் பொருள் வாங்கியுள்ளார்களா என்று விசாரணை நடந்து வருகிறது.

வேறொரு பிரபலம்

ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா பெயர்கள் போதைப் பொருள் விஷயத்தில் அடிபட்டு வரும் நிலையில் இப்போது இன்னொரு சினிமா பிரபலத்தின் பெயரும் அடிபடுகிறது.

போதைப்பொருள் பயன்படுத்தும் பட்டியலில் தமிழ் சினிமாவில் 10 பிரபல நடிகர்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மூன்றெழுத்து பெயர் கொண்ட முன்னணி நடிகர், இளம் இசையமைப்பாளர் என பலரது பெயர் அடிபடுகிறது. 

NO COMMENTS

Exit mobile version