Home இலங்கை சமூகம் பல அரச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள கோபா குழு

பல அரச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள கோபா குழு

0

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா குழு பல அரச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், எதிர்வரும் வாரத்தில் மூன்று நாட்களுக்கு கோபா குழு கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நாளை மறுநாள் 18 ஆம் திகதி ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் அதிகாரிகளும் மற்றும் 19 ஆம் திகதி தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

பொது நம்பிக்கை

அத்தோடு, பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் அதிகாரிகள் எதிர்வரும் 20 ஆம் திகதி கோபா குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அந்த அரச நிறுவனங்களின் நிர்வாகத் திறன் மற்றும் நிதி ஒழுக்கம் குறித்து இதன்போது ஆராயப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/government-institutions-invited-to-goba-team-1718507658

NO COMMENTS

Exit mobile version