யாழ்ப்பாணம்-சாவகச்சேரியில் தனியார் பேருந்து ஒன்றும் வடக்கு மாகாண அரச அதிகாரி ஒருவரது
காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று (18) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணை
இந்தநிலையில், விபத்துக்குள்ளான வாகனங்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விபத்து குறித்த விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.
