பாதிக்கப்பட்ட தகுதியான ஒருவருக்கு அரசாங்க கொடுப்பனவு கிடைக்காமல்
இருப்பதும், அதே வேளையிலே, தகுதியற்ற ஒருவருக்கு கிடைப்பதும் சமூகத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நடமாடும் சேவை ஆரம்ப நிகழ்வில் இது தொடர்பில் இன்றைய தினம்
(11.12.2025) கருத்து தெரிவித்த அவர்,
“அனர்த்த நிவாரண சேவைகள் திணைக்களத்தின்
சுற்றறிக்கைகளின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு உரிய கொடுப்பனவுகள்
கிடைப்பதற்கு எந்தவிதமான முறைப்பாடுகளும் அற்ற வகையில் கிராம மட்ட
உத்தியோகத்தர்கள், நிவாரண மற்றும் கொடுப்பனவு செயற்பாடுகளை முன்னெடுக்க
வேண்டும்.
நடமாடும் சேவை
கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்தகைய நடமாடும் சேவைகள் மூலம் தேசிய ரீதியிலே கொழும்புக்கு சென்று பூர்த்தி
செய்ய வேண்டிய தேவைப்பாடுகளை இங்கே பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஏற்பாடு இங்கே
மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
ஒவ்வொரு பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட
நடமாடும் சேவைக்குரிய தேசிய அடையாள அட்டைகள் தற்போது அந்த பிரதேச மக்களுக்கு
கிடைக்கப் பெற்றிருக்கின்றன .
இந்த பிரதேசத்தினுடைய, இந்த
மாவட்டத்தினுடைய மக்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, அனைவரும்
ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என கூறியுள்ளார்.
