Home இலங்கை சமூகம் முக்கிய அஞ்சல் நிலையங்கள் குறித்து அரசாங்கத்தின் தீர்மானம்

முக்கிய அஞ்சல் நிலையங்கள் குறித்து அரசாங்கத்தின் தீர்மானம்

0

இலங்கையின் முக்கிய நகரங்களிலுள்ள அஞ்சல் நிலையங்களைச் சுற்றுலாத் தலங்களாக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக  சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (6) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அஞ்சல் துறை

அத்துடன் நுவரெலியா, கண்டி, கொழும்பு மற்றும் காலி ஆகிய பகுதிகளிலுள்ள அஞ்சல் நிலையங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அஞ்சல் துறையை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version