நாட்டின் கலாச்சார வளத்திற்கு பங்களிப்பைச் செய்யும் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதி ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று (17.02.2025) காலை நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சீன குடியரசின் உதவியுடன் 1,996 வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கொட்டாவ பகுதியில் 108 வீடுகளைக் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டம் வெகு விரைவில் நிர்மாணிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
https://www.youtube.com/embed/YmEgnXnfMuY
