Home இலங்கை சமூகம் அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

0

அரச ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஏப்ரல் மாத சம்பளத்தை இன்று (10) வழங்க வேண்டும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக பண்டார அறிவித்துள்ளார். 

இந்த விடயம் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்திற்கான நிலுவை சம்பளத் தொகை

இதன்படி, புதிய சம்பள திருத்தத்தின் பிரகாரம் ஏப்ரல் மாதத்திற்கான நிலுவையிலுள்ள சம்பளத் தொகை எதிர்வரும் 25ஆம் திகதி வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க அரச ஊழியர்களின் சம்பளத்தை திருத்துவது தொடர்பில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version