நாட்டில் பேருந்து கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கத்தினால் பேருந்து சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கும் பேருந்து சங்கங்களுக்கும் இடையே இன்று (25) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1ஆம் திகதி திட்டமிடப்பட்ட வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் குறித்து கலந்துரையாடுவதற்கு போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பேருந்து சங்கங்களுக்கு இடையே இந்தக் கூட்டம் நடைபெற்றது.
2 வீதத்தினால் குறைப்பு
எனினும், அரசாங்கத்தின் இந்த முன்மொழிவுக்கு பேருந்து சங்கங்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்து கட்டணம் 2 வீதத்தினால் குறைக்கப்பட்டால், முதலாவது மற்றும் இரண்டாவது குறைந்தபட்ச கட்டணங்களில் எந்த திருத்தமும் இருக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதற்கு அடுத்ததாக காணப்படும் கட்டணங்களில் மாத்திரமே திருத்தம் ஏற்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.
