Home இலங்கை சமூகம் ஒரு லட்சம் மக்களை குறிவைக்கும் அரசு : இலங்கை வரைபடத்தில் உருவாகவுள்ள மாற்றம்

ஒரு லட்சம் மக்களை குறிவைக்கும் அரசு : இலங்கை வரைபடத்தில் உருவாகவுள்ள மாற்றம்

0

மன்னார் தீவிற்கு உருவாகி இருக்கக்கூடிய அச்சுறுத்தல் தனியே காற்றாலை, இல்மனைற் மற்றும் கனிம மணலோடு நின்று விடப்போவதில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத் தலைவர் நாகமுத்து பிரதீப ராஜா தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கடல் மட்டத்தை விடவும் தாழ்வான நிலப்பிரதேசங்கள் மன்னாரிற்கு உள்ளேயே காணப்படுகின்றது.

குறிப்பாக இந்த பிரதேசங்களிலே கனிம மணல் படிவுகள் இருக்கின்றது என்பது மிகவும் துரதிஷ்டமான விடயமாகும்.

ஆகவே இந்த பகுதிகளில் ஒரு மீற்றர் நிலப்பரப்பை தோண்டினால் கூட அங்கு ஒரு மீற்றர் கடல் உருவாகிறது என்பது அர்த்தம்.

ஆனால் நிறுவனங்கள் எல்லாமே 12மீற்றர் தோண்டுவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளன.

எதிர்காலத்தில் இந்த நடவடிக்கையால் மன்னார் தீவே முற்றாக நீரில் முழ்கடிக்கக்கூடிய அபாய நிலை நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…..

NO COMMENTS

Exit mobile version