வடக்கு மாகாணத்தில், மாகாண சபைகளின் கீழ் செயற்படும் 4 மருத்துவமனைகளை மத்திய அரசின் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரவுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று(15) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தம் ஏழு மருத்துவமனைகள்
மாகாண சபைகளின் கீழ் உள்ள மொத்தம் 7 மருத்துவமனைகளை, மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரத் தயாராக உள்ளதாக, அவர் அறிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் உள்ள 3 மருத்துவமனைகளையும், வடமாகாணத்தில் உள்ள 4 மருத்துவமனைகளையும் இவ்வாறு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மாகாண சபைகளின் அனுமதியை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
