Home இலங்கை சமூகம் அரச அதிகாரிகளுக்கு கேட்காத ஏழைகளின் குரல்: வேதநாயகன் குற்றச்சாட்டு

அரச அதிகாரிகளுக்கு கேட்காத ஏழைகளின் குரல்: வேதநாயகன் குற்றச்சாட்டு

0

ஏழைகளின் குரல் சில அரச அதிகாரிகளுக்கு கேட்காதநிலைமையே இப்போது இங்கு இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை வெளியிட்டுள்ளார்.

 கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

ஒப்படைக்கப்பட்ட மனு

இலங்கையில் சைகை மொழி அங்கீகரிக்கப்பட வேண்டும். அரச நிறுவனங்களை இலகுவாக அணுகக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்படவேண்டும்.

உங்களின் குரல்கள் மாத்திரமல்ல ஏழைகளின் குரலும் அரச திணைக்களங்களிலுள்ளவர்களால் கேட்கப்படுவதில்லை.

என்னிடம் ஒப்படைக்கப்பட்ட மனுவை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பேன்.

மாற்றாற்றலுடையோர் நிவாரணங்கள் கேட்டு வருவதில்லை மாறாக தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கே விரும்புகின்றனர் என்பதை தான் மீண்டும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version