Home இலங்கை அரசியல் கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை தொடர்பில் வெளியான அறிவிப்பு

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான குமுண தேசிய பூங்கா ஊடான காட்டுப்பாதை விசேட பூஜைகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் (Senthil Thondaman)  திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது இன்று (30.06.2024) நடைபெற்றது.

சுகாதார வசதிகள்

இதன்போது பாதை யாத்திரிகளுக்காக பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார அமைச்சு, பொலிஸ் மற்றும் இராணுவத்தின் மேற்பார்வையுடன் மருத்துவம், நீர் வழங்கல், தங்குமிடம் மற்றும் சுகாதார வசதிகளும் ஆளுநரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், நாடாளுமன்ற உறுப்பினர் தவராச கலையரசனட ஆகியோர் கலந்து கொண்டனர்.

Source: https://tamilwin.com/article/governor-senthil-opened-forest-road-kathirgama-1719731196

NO COMMENTS

Exit mobile version