நாட்டிலுள்ள விசேட அதிரடிப் படையினருக்கு 100 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 50 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
விசேட அதிரடிப் படையின் கீழ் நாடளாவிய ரீதியில் 76 பிரதான முகாம்களும், 23 உப முகாம்களும் மற்றும் 14 விசேட பிரிவுகளும் செயற்பட்டு வருகின்றன.
குறித்த படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகளை மேற்கொள்வதற்கு தற்போதுள்ள 314 மோட்டார் சைக்கிள்களில் 90 சதவீதமானவை 10 வருடங்களுக்கு மேல் பழமையானவையாக இருக்கின்றமையால் தொடர்ச்சியாக இயந்திரக் கோளாறுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
இதனால் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற விசேட சுற்றி வளைப்புக்களை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு தடையாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே தமது கடமைகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு விசேட அதிரடிப் படையினருக்கு 125 CC இயந்திரக் கொள்ளவுடைய 100 உந்துருளிகள் மற்றும் 50 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
