Home இலங்கை அரசியல் காணி சுவீகரிப்பு: உடைக்கப்பட்ட அரசின் கபடமுகம் – பின்னணியை அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார்

காணி சுவீகரிப்பு: உடைக்கப்பட்ட அரசின் கபடமுகம் – பின்னணியை அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார்

0

அரசாங்கத்தின் உண்மையான திட்டம் அம்பலப்படுத்தப்பட்டமையால் தான் காணி சுவீகரிப்பு குறித்து அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட வர்த்தமானியை இன்று மீளப்பெற்றுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விடயத்தில் தாங்கள் வெற்றி கண்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கில் 70 சதவீதமான மக்களுடைய காணிகளின் உரித்து தொடர்பில் சிக்கல் இருப்பதாகவும் காலங்காலமாக தீர்க்கப்படாமல் இருப்பதனால் அதனை தீர்ப்பதற்கான முயற்சியாகவே அரசாங்கம் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தது.

இந்த விடயம் குறித்து நாங்கள் சந்தித்த வெளிநாட்டு தூதுவராலயங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்ததுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் அந்தக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.” என தெரிவித்தார்.

இது தொடர்பான மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க……

https://www.youtube.com/embed/tAk-3SfYAyM

NO COMMENTS

Exit mobile version