Home இலங்கை சமூகம் யாழ். சர்வதேச விமான நிலையம் குறித்து அநுரவின் அதிரடி அறிவிப்பு

யாழ். சர்வதேச விமான நிலையம் குறித்து அநுரவின் அதிரடி அறிவிப்பு

0

ஹிங்குராங்கொடை, சிகிரியா மற்றும் திருகோணமலை உள்நாட்டு விமான நிலையங்களை மேம்படுத்தவும், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தவும் 1,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

இதற்காக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் ஈடுபடும் என ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் அடுத்த ஆண்டின் முதல் பாதியில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் மீண்டும் தொடங்கப்படும் என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இன்று (07) நாடாளுமன்றத்தில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”நீர்வள சுற்றுலா தொழிலை வளர்ச்சியடையச் செய்வதற்கு 3500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

குறிப்பாக ஹப்புத்தளை பகுதியிலுள்ள சுற்றுலா தளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஊவா மாகாணத்தின் ஹப்புத்தளை உள்ளிட்ட பல பகுதிகள் சுற்றுலா தளங்களாக மேம்படுத்தப்படும்” என தெரிவித்தார்.

https://www.youtube.com/embed/vw-YjMOieiQ

NO COMMENTS

Exit mobile version