Home இலங்கை சமூகம் அநுரவின் இந்திய விஜயம் – நிராகரிக்கப்பட்ட ரணிலின் திட்டங்கள்

அநுரவின் இந்திய விஜயம் – நிராகரிக்கப்பட்ட ரணிலின் திட்டங்கள்

0

இலங்கையில் பால்வளத் துறையின் அபிவிருத்தியில், இந்தியாவின் அமுல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை, புதிய அரசாங்கம் பின்பற்றாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் கொழும்பின் ஊடகம் ஒன்று ஆய்வுச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை தனது பால் உற்பத்தியை தன்னிறைவை கொண்டு வருவதற்காக, இந்தியாவின் தேசிய பால்வள அபிவிருத்தி சபை மற்றும் முன்னணி சந்தை நிறுவனமான அமுல் ஆகியவற்றிடம் உதவியை கோரியிருந்தது.

 பால் பண்ணை

அந்த நேரத்தில், இலங்கையின் அரசுக்குச் சொந்தமான பால் நிறுவனமான மில்கோ மற்றும் பால் பண்ணைகளை இந்தியாவின் அமுல் பால் நிறுவனம், இலங்கையுடனான கூட்டு முயற்சியின் கீழ் கையகப்படுத்தவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதற்கான உடன்படிக்கை ஒன்றிலும் ரணிலின் அரசாங்கம் கையெழுத்திட்டிருந்தது.

எனினும் தற்போதைய அரசாங்கக்கட்சியான தேசிய மக்கள் சக்தி,அப்போது எதிர்க்கட்சியாக இருந்தநிலையில், குறித்த திட்டத்துக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

 இந்திய விஜயம்

இந்தநிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது, பால்வளத் துறையின் வளர்ச்சியில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்

எனினும் ரணிலின் அரசாங்கம், இந்திய தரப்புடன் இணங்கிக்கொண்ட புரிந்துணர்வுகளின் அடிப்படையில் விடயங்கள் எவையும் பேசப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

NO COMMENTS

Exit mobile version