Home இலங்கை சமூகம் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

0

கடல் மற்றும் உள்நாட்டு நீர்நிலைகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்
சமூகத்தினருக்கு காப்பீடு திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தை விவசாயம் மற்றும் கமநல காப்பீட்டு சபையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பாதகமான வானிலை அல்லது காலநிலை காரணமாகவோ அல்லது மீன்பிடி நடவடிக்கைகளில்
ஈடுபடும்போது ஏற்படக்கூடிய திடீர் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு அல்லது
இயலாமைக்காக இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் நடவடிக்கை

கடற்றொழில் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடாத காலகட்டத்தில் விபத்து
ஏற்படும்போதும் இதன் கீழ் சலுகைகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வருடாந்தம் 2000 ரூபாய் என்ற கட்டணத்தின் செயற்படுத்தப்படும் இந்தத்
திட்டத்தின் கீழ், திடீர் மரணம் ஏற்படுமாயின் ரூபாய் 1.2 மில்லியன் இழப்பீடு
வழங்கப்படவுள்ளது.

அத்துடன், முழுமையான அல்லது பகுதியளவு இயலாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில்
இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் விளைவாக கடுமையான காயங்கள் ஏற்பட்டால் விரைவான இழப்பீட்டுத் தொகை
வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் கமநல
காப்பீட்டு சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version