Home இலங்கை சமூகம் அரசாங்கம் கல்வித்துறையில் தன்னிச்சையாக மறுசீரமைப்புக்களை செய்யக் கூடாது

அரசாங்கம் கல்வித்துறையில் தன்னிச்சையாக மறுசீரமைப்புக்களை செய்யக் கூடாது

0

அரசாங்கம் கல்வித்துறையில் தன்னிச்சையாக மறுசீரமைப்புக்களை செய்யக் கூடாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கல்வித்துறையில் மறுசீரமைப்புக்களை மேற்கொண்டு வருகின்ற போதிலும் எந்த தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் கல்வித்துறையில் மறுசீரமைப்புக்கள் செய்யப்படுமாயின் அது அனைத்து தரப்பினரதும் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

மறுசீரமைப்புக்கள்  

பேச்சுவார்த்தையின்றி தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புக்களின் ஊடாக பல்வேறு பிரச்சினைகள் உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை சேர்த்தல் போட்டி, தனியார் வகுப்பு போட்டி, பரீட்சை போட்டி, பல்கலைக்கழக அனுமதி போட்டி மற்றும் ஆங்கில மொழி திறன் போட்டி என நாட்டில் ஐந்து வகையான போட்டிகள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த போட்டிகள் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது எனவும் அது காத்திரமானதாக அமைய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version