வழங்கப்படாத ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அச்சிடுவதற்கு அட்டைகள் இல்லாததால் ஓட்டுநர் உரிமங்களை வழங்குவது நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, அதற்கு பதிலாக தற்காலிக ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது.
ஓட்டுநர் உரிமம்
இவ்வாறு, அச்சிடுவதற்கு 350,000 ஓட்டுநர் உரிமங்களின் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதனடிப்படையில், தற்டபோது அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஓட்டுநர் உரிமம் மூன்று இடங்களில் அச்சிடப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறை
இது வேரஹெராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறையின் முக்கிய மையத்திலும், ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரத்தில் கூடுதல் மையங்களிலும் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தினமும் கிட்டத்தட்ட 6000 ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில், 1500 ஓட்டுநர் உரிமங்களானது ஒரு நாள் சேவையின் கீழ் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
உரிம அட்டைகள்
சாதாரண சேவையின் கீழ் ஒரு நாளைக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் ஓட்டுநர் உரிமங்களின் எண்ணிக்கை 4500 என குறிப்பிட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ள கருத்துப்படி, திரட்டப்பட்ட ஓட்டுநர் உரிமங்களை அடுத்த இரண்டு வாரங்களில் அச்சிட்டு விநியோகிக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும் பத்து லட்சம் ஓட்டுநர் உரிம அட்டைகள் விரைவில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
