Courtesy: Sivaa Mayuri
காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட நுவரெலியா அஞ்சல் நிலையத்தை விருந்தக திட்டத்திற்காக வழங்குவதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அமைச்சர் பேச்சாளர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கட்டிடம் மற்றும் அதன் நிலப்பரப்பு அஞ்சல் துறைக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா அஞ்சல் நிலையம்
முந்தைய அரசாங்கம் நுவரெலியா அஞ்சல் நிலையத்தை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தும் தீர்மானங்களை எடுத்தது.
எனினும் புதிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கொள்கையின்படி, குறித்த கட்டிடத்தையும் அதன் வளாகத்தையும் அஞ்சல் திணைக்களத்திற்கு மட்டுமே ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தநிலையில், முன்மொழியப்பட்ட திட்டம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளையும் நிறுத்தி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.