Home இலங்கை லண்டனில் விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் ஆர்ப்பாட்டம் : இலங்கை கடும் எதிர்ப்பு

லண்டனில் விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் ஆர்ப்பாட்டம் : இலங்கை கடும் எதிர்ப்பு

0

புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை, இங்கிலாந்து உள்துறை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தமது எதிர்ப்பை தெரிவித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கடையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளுக்கு முன்னதாக, செப்டம்பர் 8 ஆம் திகதி ஓவல் மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே புலம் பெயர் தமிழர்களால் போராட்டம் நடத்தப்பட்டது.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் சபைக்கு (ஐ.சி.சி.) அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப்புலிகளின் இலச்சினையை ஆர்ப்பாட்டக்காரர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர்.

 இங்கிலாந்து உள்துறை அலுவலகத்திடம் ஆட்சேபனை

லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம, இங்கிலாந்து உள்துறை அலுவலகத்திடம் தமது ஆட்சேபனையை தெரிவித்ததாக கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு TGTE (TGTE (Transitional Government of Tamil Eelam)) விடுத்த வேண்டுகோளை இந்த ஆண்டு பிரிட்டன் அரசாங்கம் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையம் நிராகரித்தது.  

NO COMMENTS

Exit mobile version